தொழில்நுட்ப கோளாறு: 25,000 ரேஞ்சர் ரக டிரக்குகளை திரும்பபெறும் ஃபோர்டு

முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு பற்றிய ரீகால் ஜுரம் இன்னும் விட்டபாடில்லை. ஏர்பேக்கில் எழுந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 1.44 லட்சம் எப்-150 மாடல் பிக்கப் டிரக்குகளை திரும்பபெறுவதாக சமீபத்தில்தான் அறிவித்தது ஃபோர்டு.
இந்த நிலையில், மீண்டும் ஒரு ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஃபோர்டு. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 25,000 ரேஞ்சர் ரக டிரக்குகளை திரும்பபெற போவதாக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"எஞ்சினும் எரிபொருள் குழாயும் அருகருகே அமைந்துள்ளதால், எஞ்சின் சூடாகும்போது அருகில் செல்லும் எரிபொருள் குழாய் தீப்பிடித்து விடும் அபாயம் இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக கருதப்படும் 25,000 டிரக்குகளை திரும்பபெற முடிவு செய்துள்ளோம்.
திரும்பபெறும் டிரக்குகளில் எஞ்சினுக்கும் எரிபொருள் குழாய்க்கும் இடையில் பாதுகாப்பான மூடி பொருத்தி சரிசெய்து தரப்படும். சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட ரேஞ்சர் டிரக்குகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








