ஆட்டோமேட்டிக் கியருடன் ஆல் நியூ ஃபியஸ்ட்டா அறிமுகம்

All New Fiesta
மிட் சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் முதன் முறையாக ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடன் கூடிய பியஸ்ட்டாவை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஃபோர்டு ஈர்த்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட ஆல் நியூ செடான் காரான பியஸ்ட்டாவை ஃபோர்டு அறிமுகம் செய்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்த ஆல் நியூ பியஸ்ட்டா 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்சுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அசத்தும் வடிவமைப்புடன் வந்த புதிய பியஸ்ட்டா செடான் கார் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில், டியூவல் கிளட்ச் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடன் ஆல் நியூ பியஸ்ட்டாவை அறிமுகம் செய்துள்ளது ஃபோர்டு.

இந்திய செடான் கார் மார்க்கெட்டில் டியூவல் கிளட்ச் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட முதல் செடான் கார் என்ற பெருமையுடன் ஆல் நியூ பியஸ்ட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட புதிய பியஸ்ட்டா வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதேவேளை, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல்களில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட பியஸ்ட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வசதியின் மூலம் கியர் மாற்றும்போது ஏற்படும் ஆற்றல் இழப்பு தவிர்க்கும். சாதாரண கியர் பாக்ஸ் கொண்ட கார்களில் கியர் மாற்றும்போது ஆற்றல் இழப்பு ஏற்படுவதோடு அதிக எரிபொருள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, November 11, 2011, 11:57 [IST]
English summary
The Ford Fiesta is probably the American carmaker's most ambitious sedan in recent times. It is the first model to be built on its global platform. The latest news from Ford is that it has launched the Fiesta AT, India's first mid sized sedan with a dual clutch automatic transmission.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+