அடுத்த வாரம் செவர்லே 'பீட்' டீசல் கார்: ஜெனரல் மோட்டார்ஸ்

Chevrolet Beat
டெல்லி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீட் ஹேட்ச்பேக் காரின் டீசல் மாடலை வரும் 25ந் தேதி அறிமுகம் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் நாள் குறித்துவிட்டது.

ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்குள் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால்,கார் வாங்க நினைக்கும் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மாருதி ஸ்விப்ட், ரிட்ஸ்,ஃபோர்டு பிகோ மற்றும் வோக்ஸ்வேகன் போலோ கார்களுக்கு இது கடும் சந்தையை போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த கார் 996 சிசி டிடிசிஐ தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்டெக் எஞ்சினுடன் வர இருக்கிறது. 57 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த எஞ்சின் குறைந்த சப்தத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் லிட்டருக்கு 24 கி.மீ மைலேஜ் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, பல நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் பீட் வர இருக்கிறது. பீட் டீசல் அருமை பெருமைகளை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், புதிய இணையதளத்தை ஜெனரல்மோட்டார்ஸ் உருவாக்கியுள்ளது.

இது அந்த நிறுவனத்தின் முதல் டீசல் கார் என்பது மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் விற்பனையை கணிசமாக உயர்த்தும் கேம் சேஞ்சராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், கார் மார்க்கெட்டில் பீட் டீசல் அமோக வரவேற்பை பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, July 21, 2011, 8:55 [IST]
English summary
General motors has finally confirmed the launch of the diesel Beat by its official website. The new Beat to be launched 25th july. It is powered by a Smartech engine that Chevrolet claims will deliver improved performance. The carmaker has also said the diesel Beat engine's noise, vibrations and harshness (NVH) was considerably lower and will provide a better driving experience.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+