தங்க முலாம் பூசப்பட்ட நானோ கார்: மதிப்பு ஜஸ்ட் ரூ.22 கோடி மட்டுமே

Golden Nano
நம் நாட்டில் ஆபரணங்கள் வடிவமைக்கும் பணிகள் துவங்கி 5,000 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், தங்கமுலாம் பூசப்பட்ட நானோ காரை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. இந்த கார்மும்பையில் நடந்த விழாவில் நேற்று மாலை அறிமுகம் செய்யப்பட்டது.

80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளியை கொண்டு இந்த நானோ காரின் வெளிப்பக்கம் இழைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏராளமான முத்து, பவழம் உள்ளிட்ட விலை மதிப்பற்ற கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இந்த காரின் மதிப்பு ரூ.22 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 ஆபரணத்தொழிலாளர்களின் அயராத உழைப்பிலும், கைவண்ணத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தங்க நானோ கார் பொன்னிறத்தில் தகதகக்கிறது. இந்த காரை விற்பனைக்காக தயாரிக்கவில்லை என்றும், இந்த கார் தங்கள் வசமே இருக்கும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், நானோ காரின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் விளம்பர பிரச்சாரங்களுக்கு இந்த தங்க நானோவை பயன்படுத்திக்கொள்ள டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

துபாயை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவர் மெர்சிடிஸ் எஸ்- கிளாஸ் காரையும், மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த ஒருவர் புகாட்டி வேரியோன் காரையும் இதேபோன்று தங்க கார்களாக வடிவமைத்து வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 20, 2011, 10:51 [IST]
English summary
india's cheapest car is all set to possibly the most expensive too. A Tata Nano that has been built using gold will be launched by Tata Motors chairman Ratan Tata in Mumbai. The golden Nano has been built to commemorate the 5000th year of jewellery designing in India. The golden Nano is said to be worth Rs.22 crores and is adorned by several gems and precious stones. More than 22 jewellery workers were involved in the development of this car. Over 80 kilos of gold and 15 kilos of silver have been used to craft the exterior panels of this golden Nano.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+