ஜெனரல் மோட்டார்ஸ் ஹலோல் கார் ஆலைக்கு தேசிய விருது

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் குஜராத் மாநிலம், ஹலோலில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் விபத்து தடுப்பு வசதிகளையும், பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்கும் சிறந்த ஆலையை தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
மத்திய அரசால் வழங்கப்படும் இந்த உயரிய விருது தொழிற்துறை மத்தியில் பெருமை மிக்கதாக உள்ளது. இந்த நிலையில், அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் கொண்டிருப்பதாக தொடர்ந்து 3 வது ஆண்டாக ஹலோலில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் கார் ஆலை இந்த ஆண்டுக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் துணைத்தலைவர் பி.பாலேந்திரன் கூறியதாவது:
"சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து வருவதற்காக தொடர்ந்து 3 வது ஆண்டாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது மேன்மேலும் எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications








