மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய செவர்லே பீட்

Chevrolet Beat
அடுத்த ஆண்டு புதுப்பொலிவுடன் கூடிய வடிவமைப்பு, ஈக்கோடெக் எஞ்சின் மற்றும் கூடுதல் அம்சங்கள் கொண்ட புதிய செவர்லே பீட் காரை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்கிறது.

இந்தியாவில் செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் பீட் ஹேட்ச்பேக் கார் அழகிய வடிவமைப்பு கொண்ட காராக திகழ்கிறது.

அளவில் சிறிய காராக இருந்தாலும் ஹைவேரியண்ட் கார்களுக்குரிய அம்சங்களை பீட் கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்களின் தேர்வு பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

தனக்கென தனி மதிப்பையும், வாடிக்கையாளர் வளையத்தையும் பெற்றுள்ள பீ்ட் கார் விற்பனையிலும் நன்கு வளர்ந்து வருகிறது. மேலும், இந்தியாவிலேயே குறைந்த சிசி கொண்ட டீசல் எஞ்சின் கொண்ட பீட் கார் மாடலையும் ஜெனரல் மோட்டார்ஸ் கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.

இதனால், பீட் விற்பனை கணிசமாக உயர்நது வருகிறது. இந்த நிலையில், பீட் காரின் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிய அளவில் பீட் காரை வழங்கும் விதத்திலும் புதுப்பொலிவுடன் பீட் காரை ஜெனரல் மோட்டார்ஸ் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

முன்பக்க கிரில், ஹெட்லைட், பனி விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும் ரூம் பகுதி என முன்பக்கத்தில் ஏராளமான வடிவமைப்பு மாற்றங்களுடன் புதிய பீட் வருகிறது. மேலும், உள்பக்கத்தில் அதிக தரத்துடன் கூடுதல் பாகங்களுடன் புதிய பீட்டை ஜெனரல் மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது.

புதிய பீட் குறிப்பிட்டு சொல்லும்படியாக புதிய ஈக்கோடெக் எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் இலகு எடையுடன் டைரக்ட் இஞ்செக்ஷன் மற்றும் டர்போ சார்ஜிங் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, October 15, 2011, 14:39 [IST]
English summary
General motors to launch facelifted 2012 chevrolet Beat in international market by next year. The all new 2012 Beat will be launched in India next year. General motors made many more changes in exterior and interior of the New Beat. It will equipped with brand new ecotec small engine and it will give good mileage at the same time thrilling performance.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+