புதிய அம்சங்களுடன் செவர்லே குரூஸ்:ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம்

Chevrolet Cruze
டெல்லி:எங்கும் கருப்பு, எதிலும் கருப்பு, அதுதான் செவர்லே அறிமுகப்படுத்தியுள்ள ஜெட் பிளாக் குரூஸ் காரின் சிற்ப்பம்சம்.

இந்தியர்களுக்கு ஒரு முழுமையான சொகுசு அனுபவத்தை தருவதற்காக பார்த்து பார்த்து இழைத்து உருவாக்கப்பட்டுள்ளது ஜெட் பிளாக் குரூஸ்.

சொகுசு கார் மார்க்கெட்டில் செவர்லே குரூஸ் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருந்தாலும், புதிய குரூஸ் அதை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

உட்புறங்களில் தரமான பிளாஸ்டிக் மோல்டுகள், டைட்டானியம் தையல், சீட்டுகள் என அனைத்தும் கருப்பு நிறத்தில் மின்னுகின்றன. ஐபோடு வைப்பதற்கான இடம், புளூடூத் வசதி என சொகுசு காருக்கான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.

நான்கு சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் எல் விசிடிஐ தொழில்நுட்பம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சம் 150பிஎஸ் திறனையும், 4,000 ஆர்பிஎம் பவரையும் வெளிப்படுத்துகிறது. இந்த காரில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் வசதி உள்ளது.

நகர்புறங்களில் லிட்டருக்கு 14 கி.மீ., செல்லும் இந்த கார் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது லிட்டருக்கு 18.3 கி.மீ.,செல்லும் என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சொகுசு செடான் ரகத்தில் உள்ள ஹோண்டா சி்ட்டி, ஹோண்டா அக்கார்டு,ஹூண்டாய் சொனாட்டா டிரான்ஸ்பார்ம் மற்றும் டாடா அரியா கார்களுக்கு, புதிய செவர்லே ஜெட் பிளாக் குரூஸ் நிச்சயம் கடும் போட்டியை கொடுக்கும் என்றும் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள குரூஸ் மாடலைவிட, செவர்லே ஜெட் பிளாக் மாடலின் விலை ரூ.16,000 கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 10, 2011, 14:47 [IST]
English summary
General Motors India has launched New 2011 Chevrolet Cruze with Jet Black interiors and lots of other added features which looks glorious in the segment and its expected that this car will be a big gun in this segment.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+