லிட்டருக்கு 24 கிமீ செல்லும் டீசல் பீட் கார் :ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம்

Chevrolet Beat Diesel Car
டெல்லி: ரூ.4.29 லட்சம் ஆரம்ப விலையில் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்திய செவர்லே பீட் டீசல் கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கார் ஒரு லிட்டருக்கு 24 கிமீ வரை செல்வதாக ஏஆர்ஏஐ சான்றளித்துள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது.மேலும், இந்திய கார் மார்க்கெட்டில் குறைந்த சிசி திறன் கொண்ட டீசல் எஞ்சின் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

936சிசி திறனுடன் டிசிடிஐ தொழில்நுட்பம் கொண்ட கொண்ட பீட் காரின் டீசல் எஞ்சின் 4,000 ஆர்பிஎம் வேகத்தில் 58.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும்,1,500 எஞ்சின் வேகத்தில் 150என்எம் டார்க்கை கொடுக்க வல்லது.

வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பில் பெட்ரோல் பீட்டில் உள்ள அதே அம்சங்களுடன் வந்துள்ளது. பெரிய மாறுதல்கள் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால், டயரின் செக்ஷன் 170லிருந்து 165 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய பீட் டீசல் கார் நான்கு மாடல்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் மாடல் ரூ.4.29 லட்சத்திலும், எல்எஸ் மாடல் ரூ.4.59 லட்சத்திலும், எல்டி மாடல் ரூ.4.99 லட்சத்திலும், உயர்வகை எல்டி மாடல் ரூ.5.45 லட்சம் எக்ஸ்ஷோரும் விலையிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பீட் டீசல் காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1,00,000கிமீ வாரண்டியை வழங்குவதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், பீட் டீசல் மார்க்கெட்டில் நிச்சயம் ஒரு ரவுண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 25, 2011, 13:50 [IST]
English summary
General motors launches diesel variant Beat car in India today. It is Powered by a smaller capacity 936cc, 3-cylinder engine, the Chevrolet Beat Diesel is available in four variants. The new Chevrolet Beat Diesel TCDi will be available to interested buyers in, starting with the base PS model for 4.29 lakh, the LS for 4.59 lakhs, the LT for 4.99 lakhs and finally the top end LT (optional package) vairant for 5.45 lakhs (all prices are ex-showroom Delhi). GM India is also offering its buyers 3 years or 1 lakh kilometers warranty with the purchase of this car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+