ரூ.4 முதல் 6 லட்சத்தில் வரும் செவர்லே எம்பிவி: சோதனை ஓட்டம் தீவிரம்

Wuling Sun Shine
புதிய எம்பிவி காரின் சோதனை ஓட்டத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நடத்தி வருவது தற்போது வெளியாகியுள்ளது. அந்த காரின் சோதனை ஓட்டங்களின் புகைப்படங்கள் ஆட்டோமொபைல் தளங்களில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்து வருகி்றது. ஸ்பார்க், பீட், யுவா, ஏவியோ, குரூஸ் மற்றும் தவேரா எம்பிவி கார்களை அந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு 5 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யப்போவதாக சமீபத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்தது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதை உறுதிப்படுத்தும் விதத்தில் புதிய எம்பிவி காரின் சோதனை ஓட்டத்தை இந்தியாவில் ஜெனரல் மோட்டார்ஸ் நடத்தியுள்ளது. அந்த காரின் புகைப்படங்கள் ஆட்டோமொபைல் தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புதிய எம்பிவி கார் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டணி நிறுவனமான சேர்ந்த வூலிங் நிறுவனத்தின் சன்ஷைன் எம்பிவி கார் என்பதும் தெரிய வந்துள்ளது. சீனாவில் இந்த எம்பிவி அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று.

இந்த நிலையில், இந்த புதிய எம்பிவியை அதிரடியாக ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலைக்குள் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், விரைவில் மாருதி அறிமுகப்படுத்த இருக்கும் எர்டிகா எஸ்யூவி மற்றும் மஹிந்திரா அறிமுகப்படுத்த இருக்கும் குட்டி ஸைலோ எம்பிவி கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

செவர்லே பிராண்டில் வர இருக்கும் இந்த புதிய எம்பிவியில் ஃபியட் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, December 23, 2011, 9:47 [IST]
English summary
American car maker General motors to launch new MPV by next year. The company is conducting test rides in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+