தொழில்நுட்ப கோளாறு: 1.54 லட்சம் குரூஸ் கார்களை திரும்பபெறும் ஜி.எம்.

ஸ்டீயரிங் ஷாப்ட் வடிவமைப்பில் பிரச்னை மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஷிப்டிங்கில் உள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் விதமாக இந்த ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டெட்ராய்ட் ப்ரீ பிரஸ் மற்றும் சின்குவா ஊடகங்களில் இந்த ரீகால் அறிவிப்புகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 2011ம் ஆண்டு குரூஸ் கார்களுக்கு மட்டும் இந்த ரீகால் அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 1.20 லட்சம் ஆட்டோமேட்டிக் ட்ரான்மிஷன் கொண்ட குரூஸ் கார்களும் அடங்கும். ஆட்டோமேட்டிக் கியர் வசதி கொண்ட கார்களில் வேகத்துக்கு தக்கவாறு சரியான கியரில் கார் செல்லவில்லை என்பது புகாராகும்.
அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள ஷோரூம்களில் விற்பனைக்கு தயாராக உள்ள குரூஸ் கார்களும் பிரச்னை சரிசெய்யப்பட்ட பின்னரே டெலிவிரி கொடுக்கப்படும் என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








