மஹிந்திராவின் புதிய ஜீனியோ மினிடிரக் அறிமுகம்

சரக்கு மற்றும் பயணிகள் வாகன உற்பத்தியில் முன்னணி வகி்க்கும் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஜீனியோ என்ற பெயரில் புதிய மினி டிரக்கை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் கூறியதாவது:
கார் போன்ற முகப்பை கொண்ட இந்த மினிடிரக் மஹிந்திராவின் சொந்த வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.1.2டன் கொள்ளவு திறன் கொண்ட இந்த மினிடிரக்கில் அதிக இறைச்சல் இல்லாத இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
கியர் மாற்றும் அமைப்பு மற்றும் இருக்கைகள் ஆகியவை காரை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இது பயணம் செய்யும்போது சுகமான அனுபவத்தை தரும்.டைமண்ட் ஒயிட்,மார்வெல் கிரானைட்,சில்வர் ஷைன்,ஸ்கைபுளு லைன் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள 70 விற்பனை மையங்கள் வாயிலாக,அடுத்த மாதம் முதல் ஜீனியோ மினிடிரக்குகள் விற்பனை செய்யப்படும்.ஜீனியோ மினிடிரக் தயாரிப்புக்காக ரூ.225 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வரிசையில் மேலும் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








