பியஸ்ட்டா கிளாசிக் வாங்கினால் ரூ.75,000 மதிப்புள்ள தங்கம் இலவசம்

குளோபல் பியஸ்ட்டா செடான் காரை அறிமுகம் செய்வதற்கு முன்பாக ஃபோர்டு நிறுவனம், இந்திய சந்தைக்காக வடிவமைக்கப்பட்ட பியஸ்ட்டா கிளாசிக்கை அறிமுகம் செய்தது.
ஸ்லீக் வடிவமைப்பு, அருமையான கையாளுமை, கவரும் வகையில் உள்பக்க வடிவமைப்பு மற்றும் அதிக இடவசதி ஆகிய காரணங்களால் பியஸ்ட்டா கிளாசிக்குக்கு வாடிக்கையாளர் மத்தியில் தனி வரவேற்பு இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 3 வேரியண்ட்களில் பியஸ்ட்டா கிளாசிக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களை பட்டியல் எடுத்தால் அதில் பியஸ்ட்டா கிளாசிக்கும் இடம்பெற்றுவிடுகிறது.
இந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு பியஸ்ட்டா கிளாசிக் எல்எக்ஸ்ஐ பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ஃபோர்டு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. பியஸ்ட்டா கிளாசிக் டாப் வேரியண்ட் எல்எக்ஸ்ஐ பெட்ரோல் மாடல் வாங்குபவர்களுக்கு ரூ.75,000 மதிப்புள்ள தங்கத்தை இலவசமாக வழங்குவதாக ஃபோர்டு உறுதி அளிக்கிறது.
ஃபோர்டு பியஸ்ட்டா கிளாசிக் எல்எக்ஸ்ஐ பெட்ரோல் கார் ரூ.7.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, காரின் விலையில் 10 சதவீதம் அளவுக்கு ஃபோர்டு தங்கமாக தருவதாக கூறுகிறது.
வரும் 31ந் தேதி வரை இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








