செவர்லே பீட் டீசல் காரின் விலையை ரூ.15,000 உயர்த்தியது ஜிஎம்

Chevrolet Beat Diesel
ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியால் செவர்லே பீட் டீசல் காரின் விலையை ரூ.15,000 உயர்த்தியுள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.

ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால் வெளிநாட்டிலிருந்து கார் பாகங்களை இறக்குமதி செய்து வரும் பல முன்னணி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ரூபாய் மதிப்பு சரிவால் பாதிக்கப்பட்ட ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன் கார்களின் விலையை 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்தது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் கார் விலை உயர்வை அறிவித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் முன்னிலை வகிக்கும் பீட் டீசல் காரின் விலையை அந்த நிறுவனமும் ரூ.15,000 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, மற்ற கார் மாடல்களின் விலையையும் வரும் ஜனவரி மாதம் முதல் ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 7, 2011, 11:53 [IST]
English summary
General Motors India increased the price of diesel variant Beat by Rs 15,000. This hike will be implemented with immediate effect.Company also said it will raise prices of its other cars by 1-2 per cent by January next year on account of weakening of rupee
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+