எரிவாயுவில் இயங்கும் செவரோலெட் பீட்:ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம்

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டாரஸ் நிறுவனம்,இந்தியாவில் செவரோலெட் பிராண்டில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறது.இந்திய சந்தையில் தக்க வைத்துக்கொள்ள பல புதிய மாடல்களை ஜெனரல் மோட்டார்ஸ் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்,இந்திய தட்பவெப்ப நிலைகள் மற்றும் சாலைகளை கருத்தில்கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்டெக் எஞ்சினை ஜெனரல் மோட்டார்ஸ் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது.இந்த எஞ்சினை பீட் மாடலி்ல் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், எல்பிஜியில் இயங்கும் ஸ்மார்ட்டெக் எஞ்சின் பொருத்தப்பட்ட செவரோலெட் பீட் மாடலை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.இந்த எஞ்சின் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் அம்சங்கள் கொண்டது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எல்எஸ் மற்றும் எல்டி ஆகிய இரண்டு மாடல்களில் எல்பிஜியில் இயங்கும் பீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது மல்டி பாயிண்ட் சீக்குவன்ஸ் முறையில் இயங்குகிறது.இதனால் பெட்ரோல் மற்றும் எல்பிஜி எரிபொருள் மாற்றம் எளிதாக நடைபெறும்.
இது மட்டுமின்றி தீப்பிடித்தல்,எரிபொருள் விரயம்,அதிர்வுகள் போன்றவை துளியும் இருக்காது.
எஞ்சினில் உள்ள குழாய்கள் உறுதித்தன்மை நிறைந்த நைலானால் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால்,ஆயுட்காலம் முழுதும் எரிபொருள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வேலை இருக்காது.
இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்டெக் எஞ்சின் எல்பிஜியில் இயங்கும்போது 80.04 PS @ 6400 rpm திறனை வெளிப்படுத்தும்.இதன் டார்க் 103.8 Nm @ 4400 rpm ஆகும்.மேலும்,எல்பிஜியில் தொடர்ந்து 349கி.மீ.,செல்ல முடியும்.எல்பிஜி,பெட்ரோல் இரண்டையும் சேர்த்து 1,000 கி.மீ.வரை செல்லலாம்.
எரிவாயு தீர்ந்துவிட்டால்,எஞ்சின் தானாக பெட்ரோலில் இயங்கும்.தவிர,டேஷ்போர்டில் உள்ள சென்சார் ஸ்விட்ச் மூலம்,எல்பிஜி மற்றும் பெட்ரோலில் எஞ்சினை இயங்க செய்யலாம்.
மேலும்,பீட் எல்பிஜி மாடல்களுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கி.மீ வாரண்டி வழங்கப்படும்.பெட்ரோல் மாடலுக்கு 45,000 கி.மீ வாரண்டி வழங்கப்படும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








