டீசல் பீட் கார் விற்பனையால் மார்க்கெட்டில் தாக்கு பிடிக்கும் ஜிஎம்

வட்டி வீதம் உயர்வு, பெட்ரோல் விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாகவே கார் விற்பனை மந்தமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி கார் விற்பனை சூடுபிடிக்கும் கணக்குப்போட்ட கார் நிறுவனங்களின் கணிப்புகளும் பொய்யாகி உள்ளன.
கடந்த மாதம் கார் விற்பனை குறித்த அறிக்கையை ஜெனரல் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு அக்டோபரில் 10,051 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 10,062 கார்களை மட்டுமே விற்பனை செய்தது.
எதிர்பார்த்த அளவு அந்த நிறுவனம் கார் விற்பனையை எட்ட முடியவில்லை என்று கூறும் அதேவேளையில், அதன் போர்ட்போலியோவில் பீட் டீசல் கார் இல்லையென்றால் அந்த நிறுவனத்தின் கார் விற்பனை அதளபாதாளத்தில் சென்றிக்கும் என்று ஆட்டோத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் கார் விற்பனையில் பாதியளவுக்கு பீட் கார்கள் விற்பனையாகியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கடந்த மாதம் விற்பனையாகிய 5,328 பீட் கார்களில் பெரும்பான்மையான கார்கள் டீசல் மாடல் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீட் டீசல் மாடலுக்கு மார்க்கெட்டில் தேவை அதிகரித்து வருவதையடுத்து, அதன் உற்பத்தியையும் கணிசமாக உயர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் 1,797 செவர்லே ஸ்பார்க் கார்களையும், 732 குரூஸ் பிரிமியம் செடான் கார்களையும், 1,687 செவர்லே தவேரா கார்களையும், 100 கேப்டிவா எஸ்யூவிக்களையும் விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications