ஜெனரல் மோட்டார்சின் பேட்டரியில் இயங்கும் 'பீட்'

உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த காரை பார்வைக்கு கொண்டுவந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 270 கிலோ கொண்ட லித்தியம் அயான் பேட்டரி 20 கிலோவாட் மின்திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. இது 300 செல்களை கொண்டதாக இருக்கிறது.
பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய 8 மணிநேரம் ஆகிறது. ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 130 கி.மீ. வரை செல்லமுடியும் என்கிறது ஜெனரல் மோட்டார்ஸ்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் கார்ல் சிலிம் கூறுகையில்," உண்மையிலேயே இது பெருமைப்படத்தக்க தருணமாக உள்ளது. எங்களது நிறுவனம் அடுத்த அத்தியாயத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த காரை மேம்படுத்தும் பணிகளில் எங்களது எஞ்சினியர்கள் ஈடுபட்டுள்ளனர்," என்றார்.
பேட்டரி பீட் காரை தற்போது முறைப்படி அறிமுகம் செய்யவில்லை என்று ஜெனரல் மோட்டார்ஸ் கூறியுள்ளது.
இந்தியா போன்று கொரியா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பேட்டரி பீட் ஜெனரல் மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்திருந்தது.


Click it and Unblock the Notifications








