தொழிலாளர் ஸ்டிரைக்கால் ஜி.எம்.,க்கு 1,500 கார்கள் உற்பத்தி இழப்பு

General Motors
ஹலோல்: தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒரு மாதத்தை கடந்துள்ளதால், ஜெனரல் மோட்டார்சுக்கு 1,500 கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், ஹோலோலில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த மாதம் 16ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் வேலையிலிருந்து நீக்கப்படுவர் என ஜெனரல் மோட்டார்ஸ் எச்சரிக்கை விடுத்தது. இதனால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 250 தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

ஆனால், அவர்கள் தொழிற்சாலைக்குள் பணிகளை துவங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வரும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவுகள் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளன.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒரு மாதத்தை கடந்துள்ளதால், ஜெனரல் மோட்டார்சுக்கு இதுவரை 1,500 கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால், சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெனரல் மோட்டார்ஸ் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 17, 2011, 12:25 [IST]
English summary
The ongoing unrest among the labours of the General Motors plant in Halol continues after a month and the estimated loss is 1500 units a month. With the bilateral talks between the company and the striking labours could not yield any sign of compromise, the company has gone to the extent of threatening the employees to lose their jobs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+