வரும் 2013ல் விற்பனைக்கு வரும் செவர்லே ஸ்பார்க் பேட்டரி கார்

Chevrolet Spark
வரும் 2013ம் ஆண்டில் செவர்லே ஸ்பார்க் பேட்டரி காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செவர்லே பிராண்டில் கார்களை விற்பனை செய்து வருகிறது.

மேலும், மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப கார் மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் பீட் டீசல் மாடலை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய ஜெனரல் மோட்டார்ஸ், கடந்த ஜூன் மாதம் டெல்லியில் புதிய பீட் எலக்ட்ரிக் காரையும்(பேட்டரி கார் மாடல்) வெளியுலகுக்கு அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், வரும் 2013ம் ஆண்டில் செவர்லே ஸ்பார்க் பேட்டரி காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற சாலைகளில் ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று ஜிஎம் கூறியுள்ளது.

அதிநவீன நானோ பாஸ்பேட் ஏ123 தொழில்நுட்பம் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த காரின் விலை, சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் செல்லும் உள்ளிட்ட தகவல்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

இந்த கார் நிசான் லீப் உள்ளிட்ட பேட்டரி கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 29, 2011, 11:56 [IST]
English summary
General Motor Company to launch Chevrolet Spark electric version by 2013. This electric car will equipped with advanced nano phosphate A123 system lithium ion battery.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+