கார் விலையை உயர்த்த ஜிஎம், டொயோட்டோ பரிசீலனை

ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும்பாலான கார் உதிரிபாகங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றன. இந்த நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டு வருவதால் இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களால் கார் நிறுவனங்களின் உற்பத்தி செலவீனம் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால், வருவாயில் பெரிய இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு வெளிநாட்டு கார் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டோ ஆகிய நிறுவனங்கள் விரைவில் கார் விலையை உயர்த்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் துணைத் தலைவர் பாலேந்திரன் குறிப்பிடுகையில்," ஏராளமான உதிரிபாகங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவதால் இறக்குமதியாகும் உதிரிபாகங்கள் உற்பத்தி செலவீனம் கடுமையாக கூடியுள்ளது.
வரும் ஜனவரி மாதத்தில்தான் கார் விலையை உயர்த்தலாம் என்றிருந்தோம். ஆனால், தற்போதுள்ள நிலைமை கருத்திக்கொண்டு உடனடியாக கார் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்," என்றார்.
இதேபோன்று, டொயோட்டோ நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் மார்க்கெட்டிங் பிரிவு துணை நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில்,"எங்களுக்கு இரண்டு பக்கமும் இடி விழுந்துள்ளது. ஒரு பக்கம் ஜப்பானிய யென் மதிப்பு அதிகரித்து வருகிறது.
மற்றொரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பாகங்களாள் உற்பத்தி செலவீனம் கணிசமாக உயர்ந்து வருகிறது," என்றார்.


Click it and Unblock the Notifications








