ரூ.22 கோடி தங்க நானோ காரை பாதுகாக்க தினமும் ரூ.1 லட்சம் செலவு

இந்தியாவில் ஆபரணத் தொழில் துவங்கி 5,000 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், தங்க நானோ காரை டாடா குழுமத்தின் ஆபரண பிரிவான கோல்டு ப்ளஸ் வடிவமைத்தது.
பாரம்பரிய ஆபரண வடிவமைப்பு நுணுக்கங்களை அடிப்படையாக கொண்டு 80 கிலோ தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளி மற்றும் 10,000 விலை மதிப்பற்ற கற்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டது.
கோல்டு ப்ளஸ் நானோ என்று பெயரிடப்பட்ட இந்த கார் கடந்த மாதம் மும்பையில் நடந்த விழாவில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேலும், இந்த காரை இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் காட்சிக்கு வைக்கப்படும் என்று டாடா கோல்டு ப்ளஸ் தெரிவித்தது.
இந்த நிலையில், தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரூ.22 கோடி மதிப்புடைய இந்த கார் விற்பனை செய்யப்படமாட்டாது என டாடா குழுமம் தெரிவித்துள்ள நிலையில், அந்த காரை பாதுகாக்க டாடா குழுமம் தினமும் ரூ.1 லட்சம் செலவு செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








