இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கு பட்ஜெட்டில் சலுகைகள்

Mahindra Reva
டெல்லி: எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்கள் மீது விதிக்கப்படும் கலால் வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2011-12 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே சூசக தகவல்கள் வெளியாகின. அதேவேளை, கார்களுக்கு அளிக்கப்பட்டு வரும், வரிச்சலுகையை மத்திய அரசு திரும்ப பெறலாம் என்று கூறப்பட்டு வந்ததால்,கார் விலை அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்தது.

இந்த நிலையில்,எதிர்பார்த்தது போன்றே மத்திய பட்ஜெட்டில் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்களுக்களை உற்பத்தி செய்வதற்கும்,அதற்கான உதிரி பாகங்கள் மீது விதிக்கப்படும் கலால் வரி 10சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும்,ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கான குறிப்பிட்ட உதிரிபாகங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி மற்றும் இதர வரிகளிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு விதிகளுக்கு உகந்த எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்கள் குறித்த தகவல்களை பரப்பும் வகையி்ல் பிரச்சார இயக்கம் துவங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் தேவையான அளவு கூடுதல் முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,கார்கள் மீது விதி்க்கப்பட்டு வரும் கலால் வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால்,விலையேற்றத்திலிருந்து கார் வாங்க உள்ள வாடிக்கையாளர்கள் தப்பினர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 1, 2011, 9:50 [IST]
English summary
The government today proposed to set up a National Mission for Hybrid and Electric Vehicles to encourage manufacturing and selling of alternative fuel-based vehicles. The Budget for 2011-12 also proposed to cut excise duty on development and manufacturing of hybrid vehicle kits to 5 per cent from the existing 10 percent, besides fully exempting customs and counter-vailing duty (CVD) on import of special hybrid parts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+