புதிய எஸ்யூவி விலையை சரியாக சொன்னால் கார் பரிசு: மஹிந்திரா

நாட்டின் முன்னணி எஸ்யூவி தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் விரைவில் உலகத்தரத்திற்கு ஒப்பான எக்ஸ்யூவி-500 என்ற புத்தம் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய உள்ளது.
ஸ்கார்ப்பியோ, ஸைலோ ஆகிய வெற்றிகரமான மாடல்களை தொடர்ந்து மஹிந்திரா களமிறக்கும் இந்த புதிய எஸ்யூவி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், புதிய எஸ்யூவி காரின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் நூதன பரிசுப்போட்டியை மஹிந்திரா அறிவித்துள்ளது.
இதன்படி, http://www.mahindraxuv500.com என்ற மஹிந்திராவின் வெப்சைட்டில் புதிய எக்ஸ்யூவி-500 காரின் சரியான விலையை சொல்லும் ஒருவருக்கு அந்த கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 பேருக்கு பார்முலா-1 பந்தயத்திற்கான டிக்கெட்டுகளும் பரிசாக வழங்கப்படும் என்று மஹிந்திராவின் அந்த வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








