இந்தியாவில் கால் பதித்தது அமெரிக்காவின் ஹார்மன் கார் ஸ்டீரியோ

Harman Audio System
உலக அளவில் புகழ்பெற்ற ஹார்மன் கார் ஸ்டீரியோ நிறுவனம் தற்போது இந்தியாவில் அடியெடுத்து வைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்மன் நிறுவனம் பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு கார் ஸ்டீரியோக்களை தயாரித்து வழங்குகிறது.

தரம், துல்லியத்தை தரும் ஆடியோ சிஸ்டம்களை தயாரித்து வழங்கி உலக மார்க்கெட்டில் தனி முத்திரை பெற்ற நிறுவனமாக ஹார்மன் திகழ்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டை கருத்தில்க்கொண்டு தற்போது அடியெடுத்து வைத்துள்ளது ஹார்மன்.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ள ஹார்மன் முதலில் பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி நிறுவனங்களுக்கு கார் ஸ்டீரியோ மற்றும் என்போடெயின்மென்ட் சிஸ்டம்களை தயாரித்து வழங்க உள்ளது.

மேலும், டொயோட்டோ, வோக்ஸ்வேகன், டெய்ம்லெர்(பென்ஸ்),ஃபியட், ஜெனரல் மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் ஃபெராரி நிறுவனங்களும் ஹார்மனுடன் வர்த்தக தொடர்பு உள்ளது.

இந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார் ஸ்டீரியோக்களை தயாரித்து வழங்கும் வர்த்தக நோக்கோடு இந்தியாவில் கால் பதித்துள்ளது ஹார்மன்.

இதுகுறித்து ஹார்மன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் தினேஷ் சி பாலிவால் கூறியதாவது:

"டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, மாருதி சுஸுகி உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களை மனதில் வைத்து இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

மேலும், இங்கு புதிய கார் ஸ்டீரியோக்களை தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். புதிய ஆலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து வருகிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 15, 2011, 12:35 [IST]
English summary
Harman is a brand famous for its premium audio systems across the globe. The company has now entered India by establishing a regional headquarters in Bangalore. Harman will be initially developing audio systems for BMW and Audi in India.The Harman Audio system is famous for its crisp and clear sound quality. It is being sold under several brand names such as JBL, AKG and Harman-Kardon. Harman has a long list of carmakers who are its clients. They are BMW, Audi, Volkswagen, Daimler, Toyota, Fiat SpA, General Motors, Hyundai and Ferrari.The company is now looking at Indian carmakers such as Tata Motors, Mahindra and Maruti Suzuki to expand its business.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+