மாருதி தொழிலாளர் வேலைநிறுத்ததிற்கு ஹரியானா அரசு தடை

புதிய தொழிற்சங்கத்துக்கு அனுமதி தர வலியுறுத்தி ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கும், மாருதி நிர்வாகத்துக்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துவிட்டன. மேலும், தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது என மாருதி நிறுவனமும், கோரிக்கையை ஏற்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தொழிலாளர்களும் அறிவித்துள்ளனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையை மாருதி ஏற்காவிட்டால், அவர்களுக்கு ஆதரவாக வரும் திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதியில் உள்ள ஹீரோ ஹோண்டா, ஹோண்டா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வாகன தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்களும் அறிவித்துள்ளனர்.
இதனால், மானேசர் பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி மற்றும் அதற்கான உதிரிபாகங்கள் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்பிரச்னை அம்மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மாருதி தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு தடைவித்துள்ள அம்மாநில அரசு இப்பிரச்னையில் இருதரப்பும் பிடிவாதமாக இருப்பதால், தொழிலாளர் நல நீதிமன்றத்திற்கு பிரச்னையை கொண்டு சென்றுள்ளது. ஹரியான மாநில அரசின் தடை உத்தரவை மாருதி நிறுவனம் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








