புதிய சிஆர்வியின் புகைப்படங்களை வெளியிட்டது ஹோண்டா

செடான் மற்றும் எஸ்யூவி கலப்பினத்தை சேர்ந்த ஹோண்டா சிஆர்வி அழகிய எம்பிவி மாடலாக வலம் வருகிறது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட சிஆர்வியை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹோண்டா மூழ்கியுள்ளது.
இந்த கிராஸ்ஓவர் எம்பிவி பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் அனைத்து நாடுகளில் தட்பவெப்பம், சாலைநிலைகள் மற்றும் வசதிகளை கருத்தில்க்கொண்டு மறுவடிவமைப்பு செய்து வருகிறது ஹோண்டா.
புதிய சிஆர்வி 2.4 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களிலும், 2.2 லிட்டர் எஞ்சின் மாடல்களிலும் வர இருப்பதாக ஹோண்டா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிப்புற வடிவமைப்பில் புதிய சிஆர்வி மனதை மயக்கும் வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன வர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், புதிய சிஆர்வி முதலில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பானிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.
அடுத்த ஆண்டு இறுதி வாக்கில்தான் புதிய சிஆர்வி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








