மார்ச்சில் 1,027 கார்கள் விற்பனை: குதூகலத்தில் பிஎம்டபிள்யூ

BMW Logo
சென்னை: ஒரே மாதத்தில் ஆயிரம் கார்களுக்கு மேல் விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை உரிதாக்கியுள்ளது பிஎம்டபிள்யூ.

இந்திய சொகுசு கார் சந்தையில், பிஎம்டபிள்யூ கார் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பிஎம்டபிள்யூவின் கார் விற்பனை ஆயிரம் என்ற மைல்கல்லை நெருங்கி வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பிஎம்டபிள்யூ கார் விற்பனை ஆயிரத்தை கடந்துள்ளது.

ஒரே மாதத்தில் ஆயிரம் கார்களுக்கு மேல் விற்பனை செய்த முதல் சொகுசு கார் நிறுவனம் என்ற பெருமையை தனதாக்கியுள்ளது பிஎம்டபிள்யூ.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ஆன்டிரியாஸ் ஸ்காப் கூறியதாவது:

"கடந்த மார்ச் மாதம் 1,027 கார்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, விற்பனை 70 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது எங்களுக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தை அளித்துள்ளது.
கடும் போட்டிக்கு மத்தியில் ஒரே மாதத்தில் ஆயிரம் கார்களுக்கு மேல் விற்பனை செய்த முதல் சொகுசு கார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளோம். இது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விற்பனை வளர்ச்சிக்கு தக்கவாறு, சென்னை தொழிற்சாலையில் ற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இன்னும் ஒரு மாதத்தில் இரண்டாவது ஷிப்டை துவங்க முடிவு செய்துள்ளோம். இந்த மாதமும், விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கருதுகிறோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Friday, April 8, 2011, 11:58 [IST]
English summary
It for India said there has been a huge demand for luxury cars in India and it did not make him surprise with The sale volume for the German car maker BMW in March 2011 stood at the highest ever in its Indian presence – 1027 units.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+