ரூ.3.30 லட்சம் விலையில் புதிய பிக்கப் டிரக்: எச்எம் அறிமுகம்

வீர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிக்கப் டிரக் முழுக்க முழுக்க அம்பாசடர் கார் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.
கார் பிளாட்பார்மி்ல் உருவாக்கப்பட்டிருந்தாலும், சரக்கு வாகனத்திற்கு ஏற்ப கியர் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
வீர் மற்றும் வீர் எல்எக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களில் இந்த புதிய பிக்கப் டிரக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில், வீர் மாடல் பாரத் ஸ்டேஜ்-3 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்குட்டப்பட்ட டீசல் மாடலிலும், வீர் எல்எக்ஸ் மாடல் பாரத் ஸ்டேஜ்-4 விதிகளுக்கு பொருந்தும் சிஎன்ஜி எரிபொருள் மாடலிலும் கிடைக்கும்.
வீர் பிக்கப் டிரக்கில் லோடு கேரியர் தனியாகவும், வீர் எல்எக்ஸ் மாடலில் லோடு கேரியர் முன்பக்க கேபினுடன் இணைந்திருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தவிர, முன்பக்க கேபினில் மூன்று தாரளமாக அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைந்துள்ளது இதன் கூடுதல் சிறப்பாக கூறலாம்.
அம்பாசடர் கார் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள பிக்கப் டிரக் என்பதால், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் எளிதில் உதிரிபாகங்கள் கிடைக்கும் என்பது வீருக்கு பலம் கொடுக்கிறது.
கோல்கட்டாவில் அறிமுகம் செய்யப்பட் வீர் முதல்கட்டமாக கிழக்கு இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் என்றும், நடப்பு நிதி ஆண்டிற்குள் நாடு முழுவதும் வீர் விற்பனைக்கு வரும் என்றும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








