கோயம்புத்தூரில் கார் உதிரிபாக தொழிற்சாலை:அமெரிக்காவின் ஹைரோடெக் குழுமம் அறிவிப்பு

By
Hirotec Plant
கோயம்புத்தூர்: ரூ.20கோடி முதலீட்டில் கார் கதவுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை கோயம்புத்தூரில் அமைக்க இருப்பதாக ஹைரோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆட்டோமேட்டிக் கார் கதவுகள் தயாரிப்பதில் அமெரிக்காவை சேர்ந்த ஹைரோடெக் நிறுவனம்,புகழ்பெற்று விளங்குகிறது.மேலும்,புகைபோக்கி கருவிகள்,வேகம் மற்றும் எரிபொருள் அளவிடும் கருவிகள் தயாரிப்பிலும் ஹைரோடெக் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்,இந்தியாவில் கார் விற்பனை சந்தை நல்ல வளர்ச்சி கண்டு வருவதையடுத்து,தனது உதிரிபாக தொழிற்சாலையை கோயம்புத்தூரில் அமைக்க இருப்பதாக ஹைரோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹைரோடெக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கூறியதாவது:

"ஆட்டோமேட்டிக் கார் கதவு தயாரித்து வழங்குமாறு இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து பல்க் ஆர்டர் கிடைத்துள்ளது.எனவே,கோயம்புத்தூரில் கார் கதவு தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளோம்.

இதுதவிர,மாருதி சுஸுகி,வோக்ஸ்வேகன் இந்தியா,மஹிந்திரா,ரினால்ட் நிசான் குழுமம் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் ஆட்டோமேட்டிக் கார் கதவுகள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கப்படும்.

ரூ.20கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் செயல்பட துவங்கும்.இந்த தொழிற்சாலையில் 150 என்ஜினியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவர்.இந்தியாவில் கார் உதிரிபாகங்கள் வழங்குவதில்,முக்கிய நிறுவனமாக ஹைரோடெக் மாறும்,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 22, 2011, 11:49 [IST]
English summary
The Indian auto market is spreading red carpet to all the major global manufacturers since there is a lot of dearth for the products. Now the auto components follow the suit with the Hirotec Group entering into India with its latest technology for automotive doors.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+