வங்கதேசத்தில் அம்பாசடரை களமிறக்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்

Ambassador
இந்தியாவில் மார்க்கெட் இழந்த அம்பாசடர் காரை வங்கதேசத்தில் அறிமுகப்படுத்துகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.

ஒரு நேரத்தில் ஓஹோவென இருந்த அம்பாசடர் மார்க்கெட் டிரென்டு மாறியதால் மார்க்கெட் போட்டியிலிருந்து விலகியது.

தற்போது ஃபேஸ் அவுட் மாடலாக ஆன அம்பாசடருக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் அறிமுகப்படுத்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், வங்க தேசத்தில் அம்பாசடர் கார் விற்பனையை துவங்க ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

இதற்காக, வங்கதேத்தில் ரூ.50 கோடி முதலீட்டில் புதிய அசெம்பிளிங் ஆலையையும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கட்ட உள்ளது.

வங்கதேசத்தில் அம்பாசடரை அறிமுகப்படுத்துவதற்காக அந்த நாட்டின் இன்ட்ராகா குழுமத்துடன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஒப்பந்தம் போட்டுள்ளது.

வங்கதேசத்தில் கட்டப்படும் புதிய அசெம்பிளிங் ஆலையில் 1,800 சிசி இசுஸு பெட்ரோல் எஞ்சின், 1,800 சிசி இசுஸு சிஎன்ஜி எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட அம்பாசடர் மாடல்கள் அசெம்பிளிங் செய்யப்பட உள்ளது.

மேலும், வங்கதேசத்தில் அம்பாசடர் ரூ.10 லட்சம் முதல் ரூ14 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 10, 2011, 10:55 [IST]
English summary
Hindustan motors to launch Ambassador in Bangladesh market by next year. The company will set up assemble plant for ambassador in Bangladesh. The iconic car will be availble in bangaldesh at around Rs.10 lakh -14 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+