புதிய வண்ணங்களில் ஏவியேட்டர், ஸ்டன்னர்: ஹோண்டா அறிவிப்பு

ஏவியேட்டர் ஸ்கூட்டர் தற்போது ரிபெல் ரெட் மெட்டாலிக், பியர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் மான்சூன் கிரே மெட்டாலிக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த நிலையில், புதிதாக பெர்ரி பர்ப்புள் மற்றும் சன்பீம் ஒயிட் என கூடுதலாக இரண்டு புதிய கலர்களில் ஏவியேட்டர் ஸ்கூட்டர் இந்த மாத இறுதி முதல் ஷோரூம்களில் கிடைக்கும்.
இதேபோன்று, ஸ்டன்னர் பைக்கும் புதிய கலர்களில் கிடைக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. புதிய கிராபிக்ஸ் டிசைனுடன் ஏராளமான புதிய கலர்களில் ஸ்டன்னரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா.
தற்போது ஸ்டன்னர் பைக் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பியர்ல் ஸ்போர்ட்ஸ் யெல்லோ ஆகிய கலர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேண்டி பால்ம் கிரீன் மற்றும் கறுப்பு வண்ணங்களில் புதிய கிராபிக்ஸ் டிசைனுடன் கூடுதல் வண்ணங்களில் ஸ்டன்னர் பைக் விரைவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








