டெஸ்ட் டிரைவ் செய்யாமலே பிரியோவை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள்

Honda Brio
மார்க்கெட்டுக்கு புதிய கார் என்றவுடன் அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு வாங்குவதுதான் வாடிக்கையாளர்களின் வழக்கம். ஆனால், இந்த வழக்கத்தை முறியடித்து டெஸ்ட் டிரைவ் கூட இல்லாமல் ஹோண்டா மீதுள்ள நம்பிக்கையை மட்டும் வைத்து இதுவரை புக்கிங்கில் 5,000 கடந்துள்ளது பிரியோ.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தனது பிராண்டுக்கு நன்மதிப்பை பெற்றுள்ளது. மிட் சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் ஹோண்டாவின் சிட்டி கார்தான் நம்பர் ஒன். இந்த நிலையில், இந்திய தேவையை உணர்ந்து பிரியோ ஹேட்ச்பேக் காரை கடந்த மாதம் 28ந் தேதி ஹோண்டா அறிமுகம் செய்தது.

மேலும், அன்றைய தினமே பிரியோவின் புக்கிங்கையும் துவங்கியது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை ஹோண்டா இதுவரை வழங்கவில்லை. இந்த நிலையில், டெஸ்ட் டிரைவ் கூட இல்லாமல் இதுவரை 5,000 பிரியோ கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

புதிய பிரியோ 88 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ஐவிடெக் எஞ்சினுடன் வந்துள்ளது. இந்த கார் லிட்டருக்கு சராசரியாக 17கிமீ முதல் 18 கிமீ மைலேஜ் கொடுக்கும் என ஹோண்டா தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 14, 2011, 13:15 [IST]
English summary
Honda Brio hatchaback car overwhelming responce from customers. It's booking crosses 5,000 mark even without test drive chance for customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+