குறைந்த விலையில் வரும் ஹோண்டா பிரையோ பாதுகாப்பான காரா?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரையோ காரை விரைவில் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா. ரூ.4 லட்சம் விலையில் வர இருக்கும் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை தூண்டியுள்ளது.
ஹோண்டாவின் தரம் மற்றும் வசதிகளை எண்ணி வாடிக்கையாளர்கள் தற்போதே கனவுலகில் மிதக்கின்றனர். ஆனால், பிரையோ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்ற ஐயம் எழுந்துள்ளது.
சந்தை போட்டியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பிரையோவை ரூ.4 லட்சம் விலையில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதனால்,பிரையோவின் ஸ்டாண்டர்டு ஆக்சசெரீஸ் பட்டியலில் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் ஆகிய முக்கிய பாதுகாப்பு வசதிகளை இல்லாமல் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா.
ஏர்பேக்ஸ் பொருத்தப்படாததால் பிரையோவின் விலையை ரூ.45,000 வரை குறையும் என்பதால் ஹோண்டா தனது பாதுகாப்பு கொள்கையை தளர்த்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ஹோண்டா, சந்தை போட்டியால் தனது முதல் ஹேட்ச்பேக் காரான பிரையோவில் பாதுகாப்பு வசதிகளை ஸ்டான்ட்ர்டு ஆக்சஸெரீஸ் பட்டியலில் இடம் பெற செய்யாதது ஆட்டோ துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








