ரூ.3.95 லட்சத்தில் பிரையோவை அறிமுகம் செய்தது ஹோண்டா

பல்வேறு காரணங்களால் அறிமுகம் செய்யாமல் தள்ளிவைத்து வந்த பிரையோ ஹேட்ச்பேக் காரை ஒருவழியாக இன்று ஹோண்டா அறிமுகம் செய்தது. ரூ.3.95 லட்சத்தில் பிரையோவை மார்க்கெட்டை தன்பக்கம் இழுத்துள்ளது ஹோண்டா.

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பிற காரணங்களால் பிரையோவின் அறிமுகத்தை ஹோண்டா தள்ளிவைத்து வந்தது. ஆனால், பிரையோ மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை. இந்த நிலையில், பண்டிகை காலத்தை நெருங்குவதையொட்டி பிரையோவை களமிறக்க இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்தது.

இதையடுத்து, ரூ.3.95 லட்சம் ஆரம்ப விலையில் புத்தம் புதிய பிரையோவை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா. ஜாஸ் காரில் உள்ள அதே 1.2 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சினுடன் பிரையோ வந்துள்ளது.

இந்த எஞ்சின் 6,000 ஆர்பிஎம்மில் 89 பிஎச்பி ஆற்றலையும், 4800 ஆர்பிஎம்மில் 109 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பாரத் ஸ்டேஜ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களுடன் பிரையோவில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்மிஷன் கொண்டுள்ளது.

எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், டபுள் டின் இன்டகிரேடட் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை பிரையோவின் குறிப்பிடத்தக்க அம்சங்கள். மாருதி ரிட்ஸ், ஸ்விப்ட், ஃபோர்டு பிகோ, செவர்லே பீட் மற்றும் வோக்ஸ்வேகன் போலோ கார்களுக்கு பிரையோ போட்டியை கொடுக்கும்.

பிரையோவின் என்ட்ரி லெவல் மாடலான இ-வேரியண்ட் ரூ.3.95 லட்சத்திலும், எஸ் வேரியண்ட் ரூ.4.35 லட்சத்திலும், எஸ்-ஓ வேரியண்ட் ரூ.4.9 லட்சத்திலும், பிரையோவின் டாப் வேரியண்ட்டான வி வேரியண்ட் ரூ.5.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 27, 2011, 14:22 [IST]
English summary
Honda has unveiled its latest entry level model, the Brio hatchback with a starting price of Rs.3.95 lakhs. The Brio is available in four variants powered by a 1.2-litre I-VTEC engine. The Brio will be available in six colours.Takashi Nagai, the President and CEO of the Honda Siel Cars India while speaking at the launch of the new Brio said: “The Brio has been designed and developed for Indian market. It is a car that has been developed keeping in mind the needs and aspirations of the Indian market. Honda will enter the fastest growing sector in the Indian car market – the small car sector. The Brio will appeal to the young car buyers It is a true Honda and offers spacious interior while still being a compact car.”
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+