ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் கார்-சிறப்பு பார்வை

Honda Brio
போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் பிரச்னை உள்ளிட்ட விஷயங்களால் இந்தியாவில் சிறிய கார்களுக்கான மார்க்கெட் நன்கு வளர்ந்து வருகிறது. இதை கவனத்தில்கொண்டு பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது போர்ட்போலியோவில் சிறிய கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

அந்த வரிசையில் பிரிமியம் பிராண்டு பெயரை சம்பாதித்து வைத்திருக்கும் ஹோண்டாவும் தனது புத்தம் புதிய பிரியோ ஹேட்ச்பேக் காருடன் மார்க்கெட்டில் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளது.

மார்க்கெட்டில் ஹேட்ச்பேக் கார்கள் க்யூ கட்டி நிற்கும் நிலையில், போட்டியை சமாளிப்பதற்காக தனது பிராண்டுக்கான ஸ்டாண்டர்டு ஆக்சஸெரீஸ் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால், விலை குறைந்த கார் என்ற பரபரப்புடன் களமிறக்கவேண்டும் என்று ஹோண்டா திட்டமிட்டுள்ளது நன்றாக தெரிகிறது.

தற்போது கார்களில் இடம்பெற்றிருக்கும் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் சிலவற்றை பேஸ் மாடலில் கழற்றிவிட்டுவிட்டு பிரியோவை அறிமுகம் செய்துள்ளது. ரூ.3.95 லட்சம் என்ற விலையில் அதிக ஆவலைத் தூண்டியுள்ள ஹோண்டா பிரியோவின் சிறப்பம்சங்களை காணலாம்.

எஞ்சின்:

ஜாஸ் காரில் இடம்பெற்றிருக்கும் அதே 4 சிலிண்டர் 1.2 லிட்டர் ஐவிடெக் எஞ்சின்தான் பிரியோவிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 6,000 ஆர்பிஎம் வேகத்தில் 88 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. பிரியோவில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

வெளிப்புற வடிவமைப்பு:

முன்பக்கம் பரந்துவிரிந்த வடிவமைப்பை பெற்றுள்ள பிரியோ பார்த்தவுடன் கவர்கிறது. அதேவேகத்தில் பின்பக்கம் சென்று பார்த்தால் கூரையிலிருந்து முக்கால் பங்கு கண்ணாடியே இடம்பிடித்துள்ளதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதேவேளை, பக்கவாட்டு கண்ணாடிகள், வைன்ட் ஷீல்டு ஆகியவை மிக அழுத்தமாகவும், கட்டுறுதியுடன் பொருத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

இந்தியர்களின் ரசனையை உணர்ந்து எனர்ஜெட்டிக் புளூ, ராலி ரெட், அர்பன் டைட்டானியம், அலபாஸ்டர் சில்வர், டாபேட்டா ஒயிட் மற்றும் கிரிஸ்டல் பிளாக் பியர் ஆகிய 6 விதவிதமான வண்ணங்களில் பிரியோவை களமிறக்கியுள்ளது ஹோண்டா.

உள்பக்க வடிவமைப்பு:

உள்பக்கம் ஹோண்டாவின் அக்மார்க் முத்திரை பெற்ற பிளாஸ்டிக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் தரத்திற்கு உத்தரவாதம் தருகிறது. 3 ஸ்போக் கொண்ட இதன் ஸ்டீயரிங் வீல் மிக மென்மையாகவும், ஓட்டுவதற்கு சவுகரியமாகவும் இருக்கிறது.

இதன் ஸ்பீடோமீட்டர் கன்சோலும் கவர்ச்சியாகவும், தெளிவாக தெரியும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மியூசிக் சிஸ்டத்தில் சிடி ப்ளேயர் இல்லாதது குறையாக உள்ளது.

முன்பக்கம் டிரைவர் இருக்கை சவுகரியமாக இருக்கிறது. அதேவேளை, பின்பக்க இருக்கையில் 3 பேர் அமர்ந்து செல்லும் போது நெருக்கடியாக இருப்பதை உணர முடிகிறது. கியர் லிவருக்கு முன் இரண்டு கப் ஹோல்டர்களும், அதன் பின் ஒரு கப் ஹோல்டரும் கொடுக்கப்பட்டுள்ளது.

கியர் லிவருக்கு பின்னால் உள்ள கப் ஹோல்டருக்கு கீழே மேட் கொண்டு பினிஷ் செய்யப்பட்டுள்ளது. கதவுகள் போதுமான அளவு அகலமாக திறப்பதால் காருக்குள் ஏறும்போதும், இறங்கும்போது சவுகரியத்தை கொடுக்கிறது. பின்பக்க இருக்கையை மடக்கி விரித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

ஆனால், இதன் பூட் ரூம்(டிக்கி) வெறும் 175 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்டிருப்பது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

சொகுசு மற்றும் கையாளுமை:

எலெக்ட்ரிக்கல் கன்ட்ரோல் பவர் ஸ்டீயரிங் கொண்டுள்ளதால் நகரத்தில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது. மேலும், குறைந்த சப்தம் கொண்ட எஞ்சின் பயணங்களை இனிமையாக்குகிறது. இதன் ஸ்மூத்தான கியர் ஷிப்டும் நமக்கு டென்ஷனை குறைக்கிறது. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது டாப் என்ட் பிக்கப்பில் சற்று பின்தங்கினாலும், மிதவேகத்தில் போதுமான அளவு பிக்கப்பை கொடுக்கிறது பிரியோ எஞ்சின். ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள் இருப்பதும் டிரைவிங்கின்போது அதிக சவுகரியமாக இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்:

மிட் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட் பிரியோவில் ஏபிஎஸ், ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டு ஆக்சஸெரீஸ். இதுதவிர, பவர் விண்டோ, ஃபாக் லேம்ப்ஸ், எலக்ட்ரிக் மிரர்கள், கீலெஸ் என்ட்ரி ஆகியவை பிரியோவை பாதுகாப்பான கார் என்ற முத்திரையை பெற உதவுகின்றன. முன்பக்கம் டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கம் டிரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டிருப்பதால் பயமில்லா பயண அனுபவத்தை பெற முடிகிறது.

மைலேஜ்:

ஜாஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1198 சிசி ஐவிடெக் எஞ்சின்தான் என்றாலும், பிரியோ எடை குறைந்த கார் என்பதால் அதிக மைலேஜ் கொடுக்கும் என்று கணிக்க முடிகிறது. பிரியோ லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜ் கொடுப்பதாக ஏஆர்ஏஐ சான்று தெரிவிக்கிறது.

விலை:

சென்னையில் பிரியோ எக்ஸ்ஷோரூம் விலை விபரம்:

பிரியோ இ எம்டி : ரூ.4.04 லட்சம்

பிரியோ எஸ் எம்டி :ரூ.4.43 லட்சம்

பிரியோ எஸ்(ஓ) எம்டி :ரூ.5 லட்சம்

பிரியோ வி எம்டி : ரூ.5.22 லட்சம்

More from DriveSpark

Article Published On: Monday, October 3, 2011, 10:15 [IST]
English summary
Honda siel has launched a brand new Brio hatch back car in India recently.The Honda Brio is a car that has been developed keeping in mind the requirements of the Indian car buyer. It is loaded with several features that make it an ideal car for one and all.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+