இந்த மாதத்திற்குள் பிரையோவை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டம்?

Honda Brio
டெல்லி: வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள ஹோண்டாவின் முதல் சிறிய காரான பிரையோ இந்த மாத இறுதிக்குள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஹோண்டா எஞ்சினியர்களின் 5 ஆண்டுகால அயராத உழைப்பில் முழுக்க முழுக்க இந்தியாவுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஹேட்ச்பேக் கார் ரூ.4.2 லட்சம் முதல் 4.5 லட்சம் விலையில் வரும் என்று தெரிகிறது.

1200சிசி எஞ்சினுடன் வரும் பிரையோ 89 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதோடு, சோதனை நிலைகளில் லிட்டருக்கு 20கிமீ மைலேஜை தந்துள்ளது.

தனது முதல் ஹேட்ச்பேக் கார் என்பதால் ஹோண்டா மிக மிக கவனமாக இந்த காரை வடிவமைத்துள்ளது. இந்திய செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டியின் விற்பனை சரிந்துள்ளது. இதை பிரையோ மூலம் சரிகட்டிவிடலாம் என்று ஹோண்டா கருதுகிறது.

ஆனால், ஹோண்டாவிடம் டீசல் மாடல்கள் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. எனவே, பிரையோ டீசல் மாடலையும் விரைவில் அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்திய ஹேட்ச்பேக் மார்க்கெட்டுக்கு ஹோண்டாவின் பேனரோடு வரும் இந்த கார் மாருதி ஸ்விப்ட், செவர்லே பீட், வோக்ஸ்வேகன் போலோ, ஃபோர்டு பிகோ மற்றும் டோயோட்டோ லிவா ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 3, 2011, 15:12 [IST]
English summary
Much anticipated small car Brio from Honda, is speculated to grace Indian auto market in the month of September 2011. The new small car is likely to come in a price range of Rs. 4.2 lakh to Rs. 4.5 lakh and will craft tough competitive road for other rival cars such as Maruti’s Swift, Chevrolet Beat, Volkswagen’s Polo, Ford’s Figo, Hyundai’s i10 and Toyota’s Liva. The Honda Brio is especially developed for the Indian market after almost five years of extreme effort and research by observing the Indian market conditions, keeping in view the needs of local customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+