ஏப்ரலில் ஹோண்டா கார் விற்பனை பாதியாக குறைந்தது

Honda
டெல்லி: கடந்த ஏப்ரலில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனையும் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ள நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் கார் விற்பனை மட்டும் கடுமையாக சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் 3,578 கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த ஏப்ரலில் 2,012 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஏப்ரல் மாத விற்பனையை ஒப்பிடுகையில் 43.76 சதவீதம் குறைந்துவிட்டது.

ஹோண்டா துணைத்தலைவர் ஞானேஸ்வர் சென் கூறியதாவது:

"ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உதிரிபாக சப்ளையில் இடர்பாடு ஏற்பட்டதால், நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் கார் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கார் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் ஜூலை மாதத்தில் உதிரிபாக சப்ளையில் ஏற்பட்டுள்ள தொய்வு நீங்கி, கார் உற்பத்தி மீண்டும் சீரடையும் என்று கருதுகிறோம். உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பியவுடன் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்போம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 4, 2011, 12:20 [IST]
English summary
Honda India posted a 43.76 per cent turn down in sales at 2,012 units in April, over the same month a year ago. Adding, the company had sold 3,578 units in the corresponding month in the year 2010.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+