புதிய தொழில்நுட்பத்தில் கார்களை தயாரிக்கும் ஹோண்டா

Honda N Box
அதிக மைலேஜ் தரும் வகையில், கார்களின் எடையை பத்து சதவீதம் வரை குறைக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது. இதற்காக, தனது ஆலைகளில் பெரும் முதலீட்டை ஹோண்டா செய்கிறது.

கார்கள் அதிக மைலேஜ் கொடுப்பதற்கான முயற்சிகளை அனைத்து முன்னணி நிறுவனங்களும் எடுத்து வருகின்றன. நிசான் நிறுவனம் தனது கார்களின் எடையை கணிசமாக குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஹோண்டா நிறுவனமும் தனது கார்களின் எடையை 10 சதவீதம் அளவுக்கு குறைக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக, கார்களின் பேனல்களில் இணைக்க பயன்படும் நட் போல்ட்டுகளுக்கு பதிலாக வெல்டிங் மூலம் இணைக்கும் தொழில்நுட்பத்தை தனது ஆலைகளில் பயன்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பெருமளவு முதலீட்டையும் தனது ஆலைகளில் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதலில் ஜப்பானில் உள்ள ஆலைகளில் இந்த புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, வெளிநாடுகளில் உள்ள கார் ஆலைகளிலும் இந்த தொழில்நுட்பம் மூலம் கார்களை உற்பத்தி செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்ட தனது என் பாக்ஸ் காரை புதிய தொழில்நுட்பத்தில் குறைந்த எடை கொண்டதாக வடிவமைக்கும் பணிகளை ஹோண்டா துவங்கிவிட்டதாக ஜப்பானிய வர்த்தக இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக, ஜப்பானிலுள்ள தனது கார் ஆலை ஒன்றின் உற்பத்தி பிரிவை புதிய தொழில்நுட்பத்துடன் மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 27, 2011, 16:01 [IST]
English summary
Japanese car maker Honda to revamp of its car production style. The company is now mulling a new technology for its Japan plant to production light weight cars, says reports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+