வெர்னாவை வீழ்த்தி மீண்டும் நம்பர்-1 இடத்தில் ஹோண்டா சிட்டி

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிட் சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக ஹோண்டா சிட்டியின் விற்பனை கணிசமாக சரிந்தது.
இதையடுத்து, வோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய வென்ட்டோ கார் ஹோண்டா சிட்டியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெர்னா கார் புக்கிங்கில் அசத்தியதோடு மட்டுமல்லாமல் முதலிடத்தையும் பிடித்தது.
கடந்த மேமாதம் 1,800 சிட்டி கார்கள் மட்டுமே விற்பனையானதால் ஹோண்டா கடும் அதிருப்தி அடைந்தது. விற்பனையை அதிகரித்து சிட்டியை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக, அதன் விலையை ரூ.66,000 வரை குறைத்தது ஹோண்டா.
இதற்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்டில் சிட்டி காரின் விற்பனை சூடுபிடித்தது. கடந்த மாதம் வெர்னாவை விஞ்சி 5819 சிட்டி கார்கள் விற்பனையாகி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது சிட்டி. கடந்த ஜூலை மாதத்தை காட்டிலும் சிட்டி காரின் விற்பனை 42 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








