சிவிக், அக்கார்டு கார்களுக்கு புதிய டீசல் எஞ்சின் தயாரிக்கும் ஹோண்டா

ஹோண்டாவின் சிவிக், அக்கார்டு மற்றும் சிஆர்வீ சொகுசு கார்கள் உலக அளவில் பிரபலமான சொகுசு கார் மாடல்களாக திகழ்கின்றன. வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் ஹோண்டாவின் பெரும்பாலான கார்கள் பெட்ரோல் மாடலிலேயே வருகின்றன.
இது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் மனக்குறையாக உள்ளது. இந்நிலையி்ல், வாடிக்கையாளர்களின் மனக்குறையை போக்கும் விதத்திலும், டீசல் கார்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பை கருத்தில்கொண்டும் புதிய டீசல் எஞ்சினை தயாரிக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டா பிரிட்டன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் டேவிட் ஹாட்கெட்ஸ் கூறியதாவது:
"2.4 லிட்டர் ரகத்தை சேர்ந்த புதிய டீசல் எஞ்சினை தயாரித்து வருகிறோம். வரும் 2013ம் ஆண்டு முதல் காலாண்டில் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்ட கார்கள் அறிமுகப்படுத்தப்படும். அக்கார்டு காருக்கு இந்த எஞ்சினை பொருத்தி ஓராண்டுக்கு கள சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதன்பின்னர், சிவிக் காருக்கு புதிய டீசல் எஞ்சின் பொருத்த திட்டமிட்டுள்ளோம். உலகம் முழுவதும் அனைத்து சந்தைகளிலும் இந்த புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்கள் அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம், ஹோண்டா கார்களின் விற்பனை அதிகரிக்கும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








