உதிரிபாகங்கள் தட்டுப்பாடு: ஹோண்டா பிரியோ உற்பத்தி நிறுத்தம்

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம் இந்தியாவில் தனது பெரும்பாலான கார்களுக்கு தாய்லாந்து நாட்டிலுள்ள தனது ஆலையிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஹோண்டா கார் நிறுவனத்துக்கு உதிரிபாகங்கள் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜாஸ் மற்றும் சிட்டி காரின் உற்பத்தியை ஹோண்டா அடியோடு நிறுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது பிரியோ காரின் உற்பத்தியை ஹோண்டா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஹோண்டா கார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் ஸென் கூறியதாவது:
"உதிரிபாகங்கள் சப்ளை தடைபட்டுள்ளதால் பிரியோ காரின் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
உற்பத்தி தடைபட்டுள்ளதால் பிரியோ டெலிவிரியில் தாமதம் ஏற்படும். இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
எலக்ட்ரானிக் மற்றும் காருக்கு அடிப்பாகத்திற்கான உதிரிபாகங்கள் சப்ளை இல்லாததுதான் பிரியோ கார் உற்பத்தியை நிறுத்தியுள்ளோம்,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








