அடுத்த ஆண்டு வரும் புதிய ஹோண்டா சிஆர்வி- சிறப்பு தகவல்கள்

ஹோண்டா வெளியிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய சிஆர்வி காரின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பு தகவல்களை இங்கு காணலாம்.
தற்போதைய சிஆர்வியுடன் ஒப்பிடும்போது புதிய சிஆர்வியில் வெளிப்புறத்தின் அனேக இடங்களில் கறுப்பு வண்ணம் அதிகமாக பளிச்சிடுகிறது. பாடி டிசைனிலும் பார்த்தவுடன் மிரட்டும் அளவுக்கு ஹோண்டாவின் டிசைன் கைவண்ணம் நன்றாகவே தெரிகிறது.
உள்புறத்தை பொறுத்தவரை பழைய சிஆர்வியை விட விசாலமான இடவசதியை கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹோண்டாவுக்கே உரிய தரமான இன்டிரியர் டெக்கரேஷனை இது கொண்டிருக்கும்.
7 பேர் தாரளமாக அமரும் வகையில் இருக்கையின் வடிவமைப்புகளில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், பொருட்கள் வைப்பதற்கான லக்கேஜ் ரூம் குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது
இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய சிஆர்வி கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய சந்தையில் 2.2லிட்டர் டீசல் எஞ்சின், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஹோண்டா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவிலும் இதே அம்சங்களுடன் சிஆர்வி வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








