விற்பனை உயர்வால் ஜாஸ் உற்பத்தியை கூட்டுகிறது ஹோண்டா

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹேட்ச்பேக் கார்களில் விலை உயர்ந்த கார் எது என்றால், கையை நீட்டும் நிலைமை இருந்தது. ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்ட ஜாஸ பக்கம் வாடிக்கையாளர்கள் திரும்பி கூட பார்ப்பதில்லை.
இதனால், ஜாஸ் விற்பனை வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக்கூட இல்லை. பல ஆண்டுகளாக இதே நிலை நீடித்தது. ஆனால், சந்தையில் நாளுக்கு நாள் அறிமுகமாகி வரும் புதிய ஹேட்ச்பேக் கார்களால் மார்க்கெட்டில் ஜாஸ் காணாமல் போய்விடும் நிலை ஏற்பட்டது.
இதை சற்று தாமதமாக புரிந்துகொண்ட ஹோண்டா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஜாஸ் விலையை ரூ.1.75 லட்சம் வரை அதிரடியாக குறைத்து மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விலை குறைப்பு காரணமாக மாருதி ஸ்விப்ட், ஹூண்டாய் ஐ-20 உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாஸ் விலை கணிசமாக குறைக்கப்பட்டதால் வாடிக்கையாளர்களின் தேர்வு பட்டியலில் ஜாஸும் இடம் பிடித்துள்ளது. இதனால், ஜாஸ் விற்பனை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. விலை குறைப்புக்கு கைமேல் பலன் கிடைத்ததையடுத்து, ஹோண்டா நிறுவனம் ஜாஸ் உற்பத்தியை மாதத்திற்கு 1,000 கார்களாக கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








