இந்தியாவில் டீசல் கார்களை அறிமுகப்படுத்த ஹோண்டா ஆயத்தம்

Honda City
எகிறி வரும் பெட்ரோல் விலையால் இந்தியாவில் டீசல் கார் மார்க்கெட் எதிர்பாராத வகையில் வளர்நது வருகிறது. எனவே, இந்தியாவில் டீசல் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு ஹோண்டா ஆயத்தமாகி வருகிறது.

உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஹோண்டா இந்தியாவில் பெட்ரோல் கார் மாடல்களை மட்டும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் அடிக்கடி பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் டீசல் கார்களுக்கான தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால், பல முன்னணி நிறுவனங்கள் டீசல் கார்களை அறிமுக்பபடுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இதேபோன்று, ஹோண்டா நிறுவனமும் விரைவில் டீசல் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

முதலாவதாக, சிட்டி டீசல் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், தொடர்ந்து ஜாஸ், சிஆர்வி மற்றும் அக்கார்டு கார்களின் டீசல் கார்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் ஞானேஸ்வர் சென் கூறுகையில்,"இந்தியாவில் டீசல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதற்காக, ஜப்பானிலுள்ள எங்களது ஆராய்ச்சி மையத்தில் இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப டீசல் எஞ்சின்களை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன" என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 5, 2011, 14:28 [IST]
English summary
Japanese car maker Honda to launch diesel car models in India soon. The company top official revealed that these diesel engines are being developed specially for the Indian market since the demand for the same is not as much in other foreign markets.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+