அடுத்த ஆண்டு புதிய சிவிக்கை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா

Honda Civic
அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பொலிவுடன் கூடிய சிவிக் காரை ஹோண்டா அறிமுகப்படுத்துகிறது.

உலக அளவில் ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட கார் என்ற பெருமையை ஹோண்டா சிவிக் பெற்றுள்ளது. நேர்த்தியான வடிவைப்பு, அருமையான ஹேண்ட்லிங் என சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெற்றுள்ளது ஹோண்டா சிவிக்.

இந்த நிலையில், மார்க்கெட்டில் சிவிக் இடத்தை தக்கவைக்கும் விதமாக புதிய சிவிக்கை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹோண்டாவின் அமெரிக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனையில் ஹோண்டா இரணடாம் இடம் வகிக்கிறது. இந்த நிலையில், அங்கு மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் வகையிலும், விற்பனையை தக்கவைக்கும் விதத்திலும் புதுப்பொலிவுடன் ஹோண்டா சிவிக்கை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஹோண்டா நிறுவனத் தலைவர் தெட்சுவோ வார்முரா கூறியதாவது:

"தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் உள்ள குறைகளை போக்கி, புதிய தலைமுறைக்கான அம்சங்களுடன் புதிய சிவிக் காரை மாற்ற உள்ளோம். அடுத்த ஆண்டுக்குள் இந்த புதிய சிவிக் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படும்," என்றார்.

புதிய சிவிக் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், இந்தியாவிலும் புதிய சிவிக் அடுத்த ஆண்டு இறுதியில் தடம் பதிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, December 23, 2011, 14:46 [IST]
English summary
Japanese car maker Honda to launch New Civic sedan globally by next year. This plan revealed by American Honda higher official.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+