ரூ.4.04 லட்சம் விலையில் சென்னையில் பிரியோ அறிமுகம்

இந்திய சாலைநிலைகள் மற்றும் தட்பவெட்ப நிலைகளுக்கேற்ப ஹோண்டா வடிவமைத்துள்ள பிரியோ ஹேட்ச்பேக் கார் சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ.3.95 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட பிரியோ காருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 4 நாட்களில் 171 பிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தமிழக சந்தையில் பிரியோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா சியல் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் ஞானேஸ்வர் சென் பிரியோவை அறிமுகம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:
குறைந்த விலையில் ஒரு தரமான காரை இந்திய மக்களுக்கு வழங்கியுள்ளோம். இந்த காருக்கான 80 சதவீத பாகங்கள் இந்தியாவிலிருந்தே பெறப்படுகிறது.
மேலும், எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் பிரியோ கிடைக்கிறது. பிரியோ 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
பேஸ்மாடலான இஎம்டி வேரியண்ட் ரூ.4.04 லட்சத்திலும், நடுத்தரத்தை சேர்ந்த எஸ்எம்டி வேரியண்ட் ரூ.4.45 லட்சத்திலும், எஸ்(ஓ)எம்டி வேரியண்ட் ரூ.5 லட்சத்திலும், டாப் வேரியண்ட்டான விஎம்டி ரூ.5.20 லட்சத்திலும் கிடைக்கும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








