ரூ.6.99 லட்சத்தில் புதுப்பொலிவுடன் புதிய சிட்டி: ஹோண்டா அறிமுகம்

இந்திய மிட் சைஸ் மார்க்கெட்டில் விற்பனையில் ஹோண்டா சிட்டி நம்பர் ஒன்னாக இருக்கிறது. இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதத்தில் கூடுதல் அம்சங்களுடனும், வடிவமைப்பில் மாற்றங்களுடன் புதிய சிட்டியை ஹோண்டா அறிமுகப்படுத்த திட்டமிட்டது.
கடந்த செப்டம்பர் மாதமே இந்த புதிய சிட்டி கார் தாய்லாந்து மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் சிட்டி காரின் அறிமுகத்தை தள்ளி வைத்து வந்தது.
இந்த நிலையில், புதிய சிட்டி காரை இன்று இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா. புதிய சிட்டியின் பொதுவான வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனால், முன்பக்கம் கூடுதல் கவர்ச்சிக்கான புதிய மாற்றங்கள் கண்டுள்ளது.
வெளிப்புற வடிவமைப்பில் மாற்றங்கள்:
குரோம் பூச்சு கொண்ட புதிய முன்பக்க கிரில், மறுவடிவமைப்புடன் முன்பக்கம் மற்றும் பின்பக்க பம்பர், புதிய வடிவமைப்புடன் பின்பக்க டெயில் லைட்டுகள், 10 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள், கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ்(165மிமீ) ஆகியவற்றுடன் வந்துள்ளது புதிய சிட்டி.
உட்புறத்தில் மாற்றங்கள்:
புதிய ஃபேப்ரிக் இருக்கைகள், கண்ணைக் கவரும் சென்ட்ரல் கன்ட்ரோல், குரோம் பிட்டிங்குகள், புளூ மீட்டர் ஆகியவை உட்புறத்தில் மாற்றங்கள் கண்டுள்ளன.
கூடுதல் அம்சங்கள்:
சன்ரூஃப், குரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ரியர் வியூ மிரர்கள் பின்புறத்தில் டர்ன் இன்டிகேட்டர் விளக்குகள், கார்னிலியன் பியர்ல் ரெட் மற்றும் ஸ்பார்க்கிளிங் பிரவுன் ஆகிய மெட்டாலிக் கலர்களில் ஆகிய இரண்டு கலர்கள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் புதிய சிட்டியில் இடம்பெற்றுள்ளன.
மேலும், கார்ப்பரேட் எடிசன் என்ற புதிய வேரியண்ட்டையும் ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஹோண்டா சிட்டியின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்:
கார்ப்பரேட் எடிசன்: ரூ.6.99 லட்சம்
இ வேரியண்ட்: ரூ.7.70 லட்சம்
எஸ் வேரியண்ட்: ரூ.8.20 லட்சம்
வி எம்டி(மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்): ரூ.8.70 லட்சம்
வி ஏடி(ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன்): ரூ.9.42 லட்சம்
வி எம்டி(சன் ரூப் மற்றும் லெதர் சீட்): ரூ.9.50 லட்சம்
வி ஏடி(சன் ரூப் மற்றும் லெதர் சீட்): ரூ.10.22 லட்சம்


Click it and Unblock the Notifications








