முக்கால் பங்கு இந்திய பாகங்களுடன் புதிய ஜாஸ்: ஹோண்டா அறிமுகம்

இந்தியாவின் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை பெற்ற ஹோண்டா ஜாஸ், தனது அதிகப்படியான விலையால் வாடிக்கையாளர்களை விரட்டி அடித்தது. ரூ.7.36 லட்சம் என்ற ஆரம்ப விலையால் வாடிக்கையாளர்கள் ஜாஸிடமிருந்து சற்று விலகியே இருந்து வந்தனர்.
இருப்பினும், ஹோண்டாவின் தரம் நிரந்தரம் மந்திரத்தால் ஹோண்டா ஜாஸ் கார் ஓரளவு விற்பனையாகி வந்தது. மாதத்திற்கு சராசரியாக 500 கார்கள் என்று இருந்த விற்பனை திடீரென கடந்த சில மாதங்களாக அடியோடு சரிந்தது.
இதையடுத்து, ஜாஸ் விலையை ரூ.1.75 லட்சம் வரை ஒரேடியாக குறைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஹோண்டா. இந்த நிலையில், மேம்படுத்திய புதிய ஜாஸ் காரை நேற்று ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.
அதிக விலை கொண்ட கார் என்ற முத்திரையை தகர்க்கும் வகையில், ரூ.5.5 லட்சத்தில் புதிய ஜாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜாஸ் காருக்கு 76 சதவீத பாகங்கள் இந்தியாவிலிருந்து பெறப்பட்டுள்ளதால், விலையை கணிசமாக குறைந்ததாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
புதிய ஜாஸ் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வந்துள்ள ஹோண்டா ஜாஸ், லிட்டருக்கு 16.7 கிமீ செல்லும் வகையில் டியூனிங் செய்யப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இதே எஞ்சின்தான் விரைவில் ஹோண்டா அறிமுகப்படுத்த இருக்கும் பிரையோ காருக்கும் பொருத்தப்பட இருக்கிறது.
விலை குறைப்புக்காக தோற்றம், உள் அலங்காரங்களில் எந்த குறையும் வைக்காமல் ஸ்போர்ட்டி லுக்குடன் வந்துள்ளது புதிய ஜாஸ். மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜாஸ் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.6.06 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








