முன்னணி கார் நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்- சிறப்பு பார்வை

ரூ.20,000 முதல் ரூ.1.75 லட்சம் வரை கார் வாங்குவதற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை காணலாம்.
மார்க்கெட் லீடரான மாருதி, தனது அதிகம் விற்பனையாகும் ஆல்ட்டோ மற்றும் வேகன்-ஆர் கார்களுக்கு ரூ.50,000 வரை சலுகைகளை வழங்குவதாக தெரிவிக்கிறது.
கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் நிறுவனம், தனது சான்ட்ரோ மற்றும் ஐ-10 கார்களுக்கு 5.99 சதவீத வட்டியில் கார் கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளது. சான்ட்ரோ மற்றும் ஐ-10 கார்கள் அதிகம் விற்பனையாகும் ஹூண்டாய் கார் மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, பிரிமியம் கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஹோண்டா நிறுவனம், ஜாஸ் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.1.75 லட்சம் வரை அதிகபட்சமாக டிஸ்கவுன்ட்டை அறிவித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபியட் நிறுவனம் தனது டீசல் கார்களின் விலையில் ரூ.ஒரு லட்சம் வரை தள்ளுபடி கொடுப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
வோக்ஸ்வேகன் நிறுவனமும் சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 6.99சதவீத வட்டியில் வென்ட்டோ பெட்ரோல் காருக்கு கடன் வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு ஒருபடி மேலே சென்றுள்ள ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் நிறுவனங்கள் 0% வட்டியில் கார்களுக்கு கடன் வழங்குவதாக அறிவித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
கார் விற்பனை சூடுபிடிக்கும் வரை இந்த சலுகை மழை தொடரும் என்றும், இந்த சலுகைகள் வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








