அமெரிக்காவில் 1,500 சிவிக் கார்களை திரும்பெறும் ஹோண்டா

வட அமெரிக்க சந்தையில் டொயோட்டோ கொரல்லா மற்றும் ஹோண்டா அக்கார்டுக்கு அடுத்தபடியாக விற்பனையில் ஹோண்டா சிவிக் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட புதிய மாடல் ஹோண்டா சிவிக் கார்களில் எரிபொருள் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால், கார் தீப்பற்றும் அபாயம் இருப்பதால், பிரச்சினைக்குரிய கார்களில் தொழில்நுட்ப பிரச்சினையை சரிசெய்து தர ஹோண்டா முடிவு செய்துள்ளது. இதற்காக, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 1,156 சிவிக் கார்களையும், கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 377 சிவிக் கார்களையும் அந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது.
ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வாடிக்கையாளர்கள் தங்களது சிவிக் கார்களை அடுத்த வார இறுதி முதல் டீலர்களில் கொடுத்து பிரச்சினை இருக்கிறதா என்று சோதித்து கொள்ளலாம். பிரச்சினை இருந்தால் இலவசமாக புதிய எரிபொருள் குழாய் பொருத்தி தரப்படும்," என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








