கியர்பாக்ஸ் பிரச்னை: 25 லட்சம் கார்களை திரும்ப பெற ஹோண்டா முடிவு

Honda
கலிபோர்னியா: ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில் உள்ள சாப்ட்வேர் பிரச்னையை சரிசெய்யும் விதமாக, 25 லட்சம் கார்களை திரும்பபெறப்போவதாக ஹோண்டா அறிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள ஹோண்டா நிறுவன தலைமை அலுவலகத்தின் செய்திதொடர்பாளர் கிரிஸ் மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாப்ட்வேர் கோளாறு காரணமாக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் மாடல்களில் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, பிரச்னை இருப்பதாக கருதப்படும் 25 லட்சம் கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம்.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 15 லட்சம் கார்களுக்கும், சீனாவில் விற்பனை செய்யப்பட்ட 7.60 லட்சம் கார்களுக்கும், கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 1.35 லட்சம் கார்களும் திரும்ப பெற உள்ளது.

தவிர, ஐரோப்பா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட கார்களும் திரும்ப பெறப்படும். இருப்பினும், இவை குறைந்த அளவில் இருக்கும்.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட சிறிய கார், எஸ்யூவி கார், செடான் கார் என அனைத்து ரக கார்களுக்கும் இந்த ரீகால் அறிவிப்பு பொருந்தும்.குறிப்பாக, 2005 முதல் 2010 வரையிலான அக்கார்டு மாடல் கார்கள் திரும்ப பெறப்பட இருக்கிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 6, 2011, 16:18 [IST]
English summary
The Japanese auto giant Honda Motors will be recalling about 25 lakhsvehicles worldwide to repair a software related problem. The vehicles that will be called back include small cars, sport utility vehicles, minivans and even the popular Accord sedan. According to reports, the problem in software could lead to the damage in the automatic transmission system of the vehicles.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+